முகப்பு
இந்தியா

உலகிற்கு இந்தியா அளித்த பரிசு தமிழ்: பிரதமர் மோடி புகழாரம்!

மலேசியாவில் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறிய பிரதமர் மோடி..

Updated On : 7 பிப்ரவரி 2026, 5:13 pm IST
மலேசியாவில் பிரதமர் மோடி
பகிர்:

உலகிற்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் என மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ) மலேசியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று வந்துள்ள பிரதமர் மோடி மலேசியா பயணம் மேற்கொள்கிறார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்றார்.

Advertisement

Advertisement

அந்நாட்டின் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை இருநாட்டுப் பிரதமர்களும் உற்சாகத்துடன் பார்வையிட்டு, கலைஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவில்,

கோலாலம்பூர் வந்தடைந்த எனக்கு விமான நிலையத்தில் எனது நண்பர் அளித்த அன்பான வரவேற்பால் நெகிழ்ந்து போனேன். எங்களின் பேச்சுவார்த்தைக்காக ஆவலுடன் இருக்கிறேன்.

இந்தியா மற்றும் மலேசியா இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

கடந்தாண்டு ஆசியன் உச்சி மாநாட்டிற்காக மலேசியாவுக்குச் செல்ல முடியவில்ல. ஆனால் நான் மலேசியாவுக்கு வருவேன் என்று என் நண்பருக்கு உறுதியத்தேன். வாக்குறுதியளித்தப்படி நான் இங்கு வந்துள்ளேன். இது இந்தாண்டில் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.

மலேசியாவில் 29 லட்சம்(2.9 மில்லியன்) இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இது உலகின் மூன்றாவது பெரிய இந்திய வம்சாவளி சமூகமாகும். மலேசியா ஆசியான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய பங்காளியாகும். மேலும், இது இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு முக்கிய தூணாகவும் உள்ளது.

இந்திய இசையும், திரைப்படங்களும் மலேசியாவில் மிகவும் பிரபலம். பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகச் சிறப்பாகப் பாடுவார். இந்தியா - மலேசியா இடையே நெருங்கிய கலசார உறவு இருக்கிறது. இருநாட்டு உறவும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

உலகிற்கு இந்தியா அளித்த பரிசு தமிழ் என மலேசியாவில் நிகழ்ந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைத்தார். தமிழ்தான், இந்தியாவை உலகுடன் இணைக்கிறது. தமிழ் இலக்கியம் முடிவற்றது, தமிழ்க் கலாசாரம் உலகளாவிய ஒன்று.

தமிழ் இலக்கியம் என்றும் அழியா புகழ் கொண்டது. விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைக்கப் போகிறோம்.

துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழர்கள். மலேசியா போன்று என் அரசிலும் தமிழர்கள் அதிகம்.

இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உட்கட்டமைப்பை இந்தியாவில் நிறுவியுள்ளோம். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments