முகப்பு
இந்தியா

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை: காரணம்?

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை பற்றி..

Updated On : 25 பிப்ரவரி 2026, 5:37 pm IST
தற்கொலை
பகிர்:

சூரத்தின் வெசு பகுதியில் தம்பதியினர் அவர்களது 9 வயது மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் ஜே.சி. ஜாதவ் கூறுகையில்,

பிகாரைச் சேர்ந்தவர் பால்முகுந்த். அவரது மனைவி பிரியங்கா மற்றும் அவரது மூத்த மகள், இளைய மகள் ஆகிய நால்வரும் விஷம் கலந்த பொருளை உட்கொண்டுள்ளனர். அவர்களில் மூவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர்.

Advertisement

Advertisement

அதேசமயம் தம்பதியரின் ஏழு வயது இளைய மகள் உயிர் பிழைத்துள்ளார்.

பால்முகுந்த் ஒரு பங்கு வர்த்தகர் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இந்த நிலையில், வைபவ் ருங்தா என்ற நபர் துன்புறுத்தியதாகத் தற்கொலைக் குறிப்பைச் சம்பவ இடத்திலிருந்து காவல்துறை மீட்டனர்.

அந்த நபர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

summary

A couple and their nine-year-old daughter allegedly died by suicide in Vesu area of the city while another child was rescued, police said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments