கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
கர்நாடகத்தில் கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
கர்நாடகத்தில் கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மொரதகி கிராமத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த சம்பவத்தின்போது பழைய வாடகை வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
பலியானவர்கள் குருநாத் (35), அவரது மனைவி ஜோதி (28), மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளான கலம்மா படிகேரா (13) மற்றும் கீர்த்தி (9) என அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் சொந்த வீட்டில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்தக் குடும்பத்தினர் பழைய வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை இரவு, கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தீயணைப்பு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கூரை அவர்கள் மீது திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Four members of a family were killed after the roof of an old rented house collapsed during heavy rain accompanied by strong winds in this district, police said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.