பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி..
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் மண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு குழந்தைகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷாங்லா மாவட்டத்தின் கீழ் அல்பூரி பகுதியில் உள்ள ரஹீமாபாத் பகுதியில், திங்கள்கிழமை வீட்டின் ஒரு அறையில் உள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் ஏழு குழந்தைகள் சிக்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளை அகற்றி, சிக்கியிருந்த ஏழு குழந்தைகளையும் மீட்டனர். அதில் ஆறு குழந்தைகள் பலத்த காயங்களுடன் பலியாகினர். ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டடார்.
Advertisement
Advertisement
கடந்த மாதம், சார்சத்தா மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததுடன், தம்பதியினர் பலத்த காயமடைந்தனர்.
At least six children were killed and one was injured when the roof of a mud house collapsed in Pakistan's Khyber Pakhtunkhwa district, officials said on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.