நேபாள பொதுத் தேர்தல்: மார்ச் 2 முதல் இந்திய எல்லை மூடல்!
நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், 3 நாள்களுக்கு இந்திய எல்லை மூடப்படுவது குறித்து..
நேபாளத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 2 முதல் 3 நாள்களுக்கு இந்திய-நேபாள எல்லை மூடப்படுகிறது.
நேபாளத்தில் மார்ச் 5 ஆம் தேதியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனயடுத்து, தேர்தல் செயல்முறை, சுதந்திரமான, நியாயமான, அச்சமற்ற மற்றும் நம்பகமான சூழலில் நடத்தப்படுவதை உறுதி செய்யும்வகையில், இந்தியாவை ஒட்டியுள்ள பாங்கே மாவட்டத்தின் முழு பகுதியிலும் உள்ள அனைத்து எல்லைப் புறக்காவல் நிலைய நிலையங்களும் மார்ச் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் மார்ச் 5 நள்ளிரவு வரையில் மூடப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் நிறுத்தப்படவுள்ளது. ஆனால், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற முக்கியமான பொருள்களின் இயக்கம் நிறுத்தப்படாது.
Advertisement
Advertisement
எல்லையில் ஏற்கெனவே கூடுதல் கண்காணிப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. அடையாள ஆவணங்களை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே, மக்கள் எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். இருநாட்டு மக்களும், இந்தத் தடைக்காலத்தில் அவசியமின்றி எல்லையைக் கடப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Indo-Nepal border to remain closed from March 2 midnight ahead of Nepal polls
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.