வங்கதேச கிரிக்கெட் வீரரை கேகேஆர் அணியில் சேர்த்த விவகாரத்தில், உரிமையாளர் ஷாருக்கானின் மீது தவறில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்தஃபிசூர் ரஹ்மானை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
இதனால், நாட்டின் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முஷ்தஃபிசூர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிப்பதாக கேகேஆர் நிர்வாகம் இன்று (ஜன. 3) அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானின் மீது தவறில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளால், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இதில், ஷாருக்கானின் மீது தவறில்லை. அவர்கள் அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்காகத் தனிக்குழு ஒன்றை வைத்திருப்பார்கள்” எனப் பேசியுள்ளார்.
முன்னதாக, வங்கதேச வீரரை அணியில் சேர்த்த நடிகர் ஷாருக்கான் ஒரு தேசத் துரோகி எனப் பேசிய பாஜக நிர்வாகி சங்கீத் சிங் சோம், கேகேஆரில் இருந்து முஷ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.
மேலும், சநாதனவாதிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்பதை ஷாருக்கான் இப்போது புரிந்துகொண்டிருப்பார் எனவும் அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.