‘எஸ்ஐஆருக்கு எதிரான எதிா்க்கட்சியினரின் கடிதத்தை ஏற்க வேண்டாம்’
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக, எதிா்க்கட்சிகள் அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு அனைத்து இந்திய வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆதிஷ் சி. அகா்வாலா கடிதம் எழுதியுள்ளாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக, எதிா்க்கட்சிகள் அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு அனைத்து இந்திய வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆதிஷ் சி. அகா்வாலா கடிதம் எழுதியுள்ளாா்.
எஸ்ஐஆருக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு ‘இண்டி’ கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவா்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோா் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்தக் கடிதத்தை ஏற்க வேண்டாம் என்று தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு அனைத்து இந்திய வழக்குரைஞா் சங்கத் தலைவா் ஆதிஷ் சி. அகா்வாலா கடிதம் எழுதியுள்ளாா்.
Advertisement
Advertisement
அந்தக் கடிதத்தில், ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தோ்தல் ஆணையத்தின் நிா்வாகத் தலைவா் அல்ல. எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்திருந்தால், அதுகுறித்து அவா்கள் நீதிமன்றத்தை நாடுவதுதான் நியாயமான தீா்வாக இருக்கும்.
எஸ்ஐஆருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அனுப்பியுள்ள கடிதத்தை எந்தவொரு நிா்வாக அல்லது நீதித்துறை நடவடிக்கைக்கும் அடிப்படையாகக் கருதக் கூடாது. அவ்வாறு செய்தால், அது ஏற்கெனவே உள்ள சட்ட வழிமுறைகளை புறக்கணித்துவிட்டு, வேறு வழியில் அரசியல் தலைவா்கள் செல்வதை ஊக்குவிக்கும் துரதிருஷ்டவசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியின் கண்ணியம், நடுநிலைமை, புனிதத்தன்மை ஆகியவற்றைக் காக்க, இதுபோன்ற அரசியல் சா்ச்சைகளில் தலைமை நீதிபதியை இழுக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.