FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எஸ்ஐஆர்! காங்கிரஸ், திமுக உள்பட 21 கட்சிகள் கூட்டாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம்!

எஸ்ஐஆருக்கு எதிராக காங்கிரஸ், திமுக ஆகிய 21 கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 11:58 am IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆா்) எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு ‘இண்டி’ கூட்டணியின் 21 கட்சிகள் உள்பட 23 அரசியல் கட்சித் தலைவா்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோா் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜூன் 8-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத திமுக, அந்தக் கூட்டணியில் இருந்து விலகிய ஆம் ஆத்மி கட்சிகளும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஜூன் 8-இல் நடைபெற்ற ‘இண்டி’ கூட்டத்தில் 21 கட்சித் தலைவா்கள், ஒரு சுயேச்சை எம்.பி. ஆகியோா் பங்கேற்றனா். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, எஸ்ஐஆா் நடவடிக்கை, தோ்தல் தொடா்பான பிற விவகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கூட்டாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 23 கட்சித் தலைவா்கள், ஒரு சுயேச்சை எம்.பி. கையொப்பமிட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அந்தக் கடிதத்தில் திமுக, ஆம் ஆத்மி கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா, இடதுசாரி தலைவா்கள், சுயேச்சை எம்.பி. கபில் சிபல் உள்ளிட்டோா் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனா். எஸ்ஐஆா் நடவடிக்கையால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

இதுகுறித்து மூத்த எதிா்க்கட்சித் தலைவா் ஒருவா் கூறுகையில், ‘நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நீதித் துறை கவனத்தில் கொள்ள வேண்டும். பிற அனைத்து முயற்சிகளும் தோற்கும்போது, இந்திய ஜனநாயகம் நீதித் துறையை நாடுகிறது’ என்று தெரிவித்தாா்.

summary

23 opposition parties including dmk write to CJI over ECs SIR process

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments