ரூ. 40 கோடி மோசடி புகார்: காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்!
கோவை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்...
கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி சாதாரணக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் மேற்கொண்டதில் ரூ. 40 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி ஆணையர் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பெண் கவுன்சிலர்கள், அவரை இழுத்து தாக்கினர். இதனால் மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை மேயர் கா.ரங்கநாயகி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
தொடந்து கூட்டத்தை விட்டு வெளியேறிய கவுன்சிலர் காயத்ரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், "செம்மொழிப் பூங்கா பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது, மாநகராட்சியில் நடைபெற்ற தணிக்கை மூலமாகத் தெரிய வந்துள்ளது. இதைக் கேட்டால் என்னைத் தாக்குகின்றனர். முதல்வர் விஜய் இச்சம்பவத்தைப் பார்த்தால் திமுகவினரைச் சும்மா விடமாட்டார்" என்றார்.
Rs. 40 crore fraud allegation: DMK councilors attack Congress councilor in coimbatore
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.