டிஆர்எஸ் தலைவர் கவிதா குண்டுக்கட்டாக கைது!
டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கவிதா கைது செய்யப்பட்டது தொடர்பாக..
தெலங்கானா மாநிலம் போடுப்பல் பகுதியில் தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா தனி மாநிலம் கோரிய போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு 250 சதுர அடி வீட்டு மனைகள் வழங்கப்படும் எனக் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, உப்பல் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட போடுப்பல் பகுதியில் கவிதா தலைமையில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், போராட்டம் நடைபெறவிருந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்திற்கு வரவிடாமல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். இருப்பினும் தடையை மீறி முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்க முயன்றார் கவிதா.
Advertisement
Advertisement
இதனிடையே போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கவிதா அவரது ஆதரவாளர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து குண்டுக்கட்டாக பொல்லாரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
Kavitha, a leader of the Telangana Rashtra Samithi (TRS) party, has been arrested in the Boduppal area of Telangana.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.