முகப்பு
இந்தியா

தில்லியில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தச் சதித் திட்டம்: 4 பயங்கரவாதிகள் கைது

தில்லியில் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டது குறித்து...

Updated On : 3 ஜூலை 2026, 8:42 am IST
பயங்கரவாதிகள் கைது - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் வழிபாட்டுத் தலங்கள், முக்கிய காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டியதாக பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் பொறுப்பாளரான சாஷாத் பட்டி என்பவர், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் இந்தியாவுக்கு கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுப்தீப் சிங் (23) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இவரிடமிருந்த தானியங்கி துப்பாக்கி, தோட்டாக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர் பாகிஸ்தானின் ட்ரோன் ஆபரேட்டர்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவருடன் சேர்ந்து பணியாற்றியதாக குர்ஜந்த் சிங், சஜன்சிங், ககன்பிரீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்தும் நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் நால்வரும் சேர்ந்து தில்லியின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

summary

Delhi Police arrests four in ISI-sponsored terror and arms network crackdown

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments