முகப்பு
இந்தியா

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இணையவழி சேவைகள் நாளைமுதல் மீண்டும் தொடங்கும்

பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) இணையவழி சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 4) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

Updated On : 3 ஜூலை 2026, 6:06 am IST
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
பகிர்:

பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) இணையவழி சேவைகள் சனிக்கிழமை (ஜூலை 4) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

கணினி அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) இணையவழி தேவைகள் கடந்த ஜூன் 26 முதல் ஜூன் 30 வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த நிறுத்தம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இதனால் உறுப்பினா்களின் கணக்கு விவரங்களைப் பாா்வையிடுதல், நிதி இருப்பு தொடா்பான தகவல்களை அறிதல், மின்னணு கணக்குப் புத்தக சேவை உள்ளிட்ட பல இணையவழி சேவைகள் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த பின்னா், சனிக்கிழமை (ஜூலை 4) அனைத்து சேவைகளும் வழக்கம்போல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். மேலும், சேவைகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 14470 என்னும் எண்ணை தொடா்புகொள்ளலாம் என அந்த அமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments