முகப்பு
இந்தியா

வருங்கால வைப்பு நிதி! அதிகபட்ச கட்டாய பங்களிப்புத் தொகை ரூ.1,800 ! ஆனால்

வருங்கால வைப்பு நிதி கட்டாய பங்களிப்புத் தொகை ரூ.1,800 ஆக நிர்ணயம் பற்றி..

Updated On : 2 ஜூலை 2026, 1:48 pm IST
வருங்கால வைப்பு நிதி - file photo
பகிர்:

நாடு முழுவதும் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி கட்டாய பங்களிப்புத் தொகை ரூ.1,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகையை விருப்பத்தின்பேரில் செலுத்தவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, புதிய 'ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டம், 2026'-ன் கீழ், மாதத்திற்கு ரூ.15,000 வரை ஊதியம் பெறுவோர், அவர்களது ஊதியத்தில் 12 சதவிகிதம் என்ற அடிப்படையில், மாதம் ரூ.1800 செலுத்த வேண்டும். எனவே, இந்த 1800 ரூபாயை, கட்டாய பங்களிப்பின் உச்சபட்ச தொகையாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, ஒரு ஊழியர் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், இதன்படி மாதம் 1,800 ரூபாயை வருங்கால வைப்பு நிதியாக (PF) கட்டாயமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஒருவர் ரூ.1 லட்சம் மாத ஊதியம் ஈட்டினாலும், அவர்களது அதிகபட்ச பங்களிப்பாக ரூ.1800 இருக்கும். ஒருவேளை ஊழியர் விருப்பத்தின்பேரில் இந்த தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

அதாவது, ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, அதிகப்படியான பலனை அடையும் வகையில், தாமாக முன்வந்து, அதிகப்படியான வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை செலுத்த முன்வரலாம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், அதேவேளையில், இந்தத் தொகைக்கு ஏற்ப, அவர்கள் பணியாற்றும் நிறுவனமும் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகை அல்லது அதிகத் தொகையை செலுத்துவது குறித்து சுயமாக முடிவெடுக்கலாம்.

அது மட்டுமல்லாமல், அதிகப்படியாக செலுத்தும் பங்களிப்பை நிறுத்தவோ, குறைக்கவோ, ஊழியர்களும், நிறுவனங்களும் எப்போது வேண்டுமானாலும் முடிவெடுத்து அறிவிக்கலாம் என்றும் மத்திய அரசு வழிவகை செய்திருக்கிறது.

இந்த புதிய நடைமுறை சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி பயனர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இது நாள்வரை, கட்டாய முறையில் பங்களிப்புப் பெற்று அது ஓய்வுபெறும்போது கிடைத்து வந்தது. இதனைக் குறைக்கும்போது ஓய்வுபெறும் காலத்தில் கிடைக்கும் நிதியுதவி குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

அதுபோல, ரூ.1800-ஐ விட அதிகத் தொகை பிடித்தம் செய்வது ஊழியர்களின் விருப்பத்தின்பேரில் விடப்பட்டிருப்பது, பெரிய அளவில் அவர்களுக்கு பயனளிக்காது என்றே கூறப்படுகிறது.

summary

The mandatory Provident Fund contribution is ₹1,800!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments