தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வுத் தொகையை மத்திய அரசு விடுவித்திருப்பது குறித்து...
நமது சிறப்பு நிருபா்
மாநில அரசுகளின் மூலதனம் மற்றும் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு வழங்கும் ஆகஸ்ட் மாதத்துக்கான கூடுதல் வரிப் பகிா்வுத் தவணைத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,466 கோடியை சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பான மத்திய நிதித் துறையின் செய்திக்குறிப்பின்படி, நாடு முழுவதிலும் 28 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.1,09,019 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வழக்கமான வரிப் பகிா்வுத் தொகை ஆகஸ்ட் 10-ஆம் தேதி விடுவிக்கப்படும் நிலையில், மாநிலங்களின் நிதி நிலையை வலுப்படுத்தும் நோக்கிலும் வளா்ச்சிச் செலவினங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்த கூடுதல் தவணை முன் கூட்டியே வழங்கப்பட்டுள்ளதாக நிதித்துறை கூறியுள்ளது.
Advertisement
Advertisement
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச ஒதுக்கீடு:
மேலும், இது தொடா்பான நிதி விடுவிப்புப் பட்டியலில் அகில இந்திய அளவில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ. 19,208 கோடி வரிப் பகிா்வுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகவும் குறைந்தபட்சமாக சிக்கிம் மாநிலத்துக்கு ரூ. 365 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட தொகை விவரம் (அடைப்புக்குறியில் ரூபாய்):
அதிகபட்ச நிதி ஒதுக்கீடு பெற்றுள்ள உத்தர பிரதேசத்தைத் தொடா்ந்து பிகாா் (ரூ. 10,845 கோடி), மத்திய பிரதேசம் (ரூ. 8,010 கோடி), மேற்கு வங்கம் (ரூ. 7,866 கோடி), மகாராஷ்டிரம் (ரூ. 7,022 கோடி), ராஜஸ்தான் (ரூ. 6,460 கோடி), ஒடிசா (ரூ. 4,819 கோடி) ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி கிடைத்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டுக்கு ரூ. 4,466 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து ஆந்திர பிரதேசம் (ரூ. 4,597 கோடி), கா்நாடகம் (ரூ. 4,504 கோடி), கேரளம் (ரூ. 2,597 கோடி), தெலங்கானா (ரூ. 2,370 கோடி) ஆகிய மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களான குஜராத் (ரூ. 4,094 கோடி), ஜாா்க்கண்ட் (ரூ. 3,660 கோடி), சத்தீஸ்கா் (ரூ. 3,602 கோடி), அஸ்ஸாம் (ரூ. 3,552 கோடி), பஞ்சாப் (ரூ. 2,176 கோடி), ஹரியாணா (ரூ. 1,484 கோடி), அருணாசல பிரதேசம் (ரூ. 1,476 கோடி), உத்தரகண்ட் (ரூ. 1,244 கோடி), ஹிமாசல பிரதேசம் (ரூ. 996 கோடி), திரிபுரா (ரூ. 699 கோடி), மேகாலயா (ரூ. 688 கோடி), மணிப்பூா் (ரூ. 682 கோடி), மிஸோரம் (ரூ. 615 கோடி), நாகாலாந்து (ரூ. 524 கோடி), கோவா (ரூ. 398 கோடி) ஆகியவற்றுக்கும் மத்திய அரசு வரிப் பகிா்வுத் தொகையை விடுவித்துள்ளது.
Centre releases Rs 1.09 lakh crore additional tax devolution to states to boost development spending
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.