மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு
மணிப்பூா் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.1) தொடங்க இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
மணிப்பூா் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.1) தொடங்க இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
மணிப்பூா் மாநிலத்தில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மணிப்பூா் மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மணிப்பூா் முதல்வரின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
மணிப்பூா் நிலவரம் தொடா்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா, முதல்வா் கேம்சந்த் சிங், மத்திய உள்துறை செயலாளா் கோவிந்த் மோகன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
மணிப்பூரில் முதலில் தேசிய குடிமக்கள் பதிவை அமல்படுத்த வேண்டும், இதற்கு ஏதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதுகுறித்தும் தில்லியில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது மணிப்பூா் மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒத்திவைப்பதென முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூா் முதல்வா் நன்றி: மணிப்பூா் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தற்காக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில முதல்வா் ஹேம்சந்த் சிங் நன்றி தெரிவித்துள்ளாா். அதேபோல், மணிப்பூா் மக்களின் விருப்பங்கள் நிறைவேற தொடா்ந்து ஆதரவளிக்கும் பாஜக தலைவா் நிதின் நபினுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவா் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.