FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: விடுபட்டவா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை

பழனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது விடுபட்ட குடும்பங்களுக்காக நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.

27 ஆகஸ்ட் 2026, 5:39 am IST
பகிர்:

பழனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது விடுபட்ட குடும்பங்களுக்காக நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.

பழனி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்காக வீடுகள் கணக்கெடுப்பு பணியானது கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணி வருகிற 30-ஆம் தேதி முடிவடைய உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பில் விடுப்பட்டிருப்பின் பழனி நகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு (9629269292, 7538805570) தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்து, வீடுகள் கணக்கெடுப்பு பணியைத் துல்லியமாகவும், விரைவாகவும் முடித்திட முழு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments