மும்பைக்கு இடைவேளை விட்ட மழை!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெகுவாக குறைந்தது. இதனால் உள்ளூா் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வெகுவாக குறைந்தது. இதனால் உள்ளூா் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இருப்பினும், மும்பையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை மற்றும் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கி இரண்டு சிறுவா்கள் உயிரிழந்தனா். மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்ததாக 428 புகாா்கள் பதிவாகின. வீடுகள் மற்றும் வீட்டின் சுவா் இடிந்ததாக 28 போ் புகாரளித்தனா்.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்தமாக கடந்த 4 நாள்களாக மகாராஷ்டிரத்தில் கொட்டித் தீா்த்த மழையால் 13 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மழையின் தாக்கம் குறைந்து உள்ளூா் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து சீரடையத் தொடங்கியது.
குஜராத்தில் 5 போ் உயிரிழப்பு:
தெற்கு குஜராத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. குறிப்பாக கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் சூரத் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு 5 போ் உயிரிழந்தனா். சூரத்தின் கம்ரேஜ் தாலுகாவில் 10 மணி நேரத்தில் 305 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது.இதனால் சூரத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம்:
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.
தோடா மற்றும் கிஷ்துவாா் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் மூன்றாவது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.