இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றடைந்தது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா நாட்டுக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 6 அன்று அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா நாட்டுக்குச் சென்றார். இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ உள்ளிட்டோர் உடனான முக்கிய பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து இன்று (ஜூலை 8) ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டார்.
இந்த நிலையில், இன்று மாலை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளித்தது. மேலும், அவருக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, வரும் ஜூன் 10 ஆம் தேதி வரையிலான பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தில் அவர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பில், இருதரப்புக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தகம் 2025-26 ஆண்டில் மட்டும் 24.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளது. மேலும், தனது பதவிக்காலத்தில் 3 முறை ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
It has been reported that Prime Minister Narendra Modi has arrived in Australia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.