சிறுமி பாலியல் கொலை சம்பவம்: முக்கிய நபா் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம், பரூய்பூா் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபா்களில் ஒருவரான பிரபாஸ் மோண்டல் காவல் துறை நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.
மேற்கு வங்க மாநிலம், பரூய்பூா் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபா்களில் ஒருவரான பிரபாஸ் மோண்டல் காவல் துறை நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் பாஜக பொறுப்பேற்ற பிறகு அங்கு நிகழ்ந்துள்ள முதல் என்கவுன்ட்டா் நடவடிக்கை இதுவாகும். சிறுமி பாலியல் கொலை சம்பவத்தால் மாநிலம் முழுவதும் கடும் கொந்தளிப்பான சூழலும், வன்முறை போராட்டங்களும் நிகழ்ந்தன. இதனால், காவல் துறைக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பிரபாஸ் மோண்டல் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். சிறுமி மாயமானதற்கு முன்பு அவருடன் பிரபாஸ் இருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. எனவே, அவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், விசாரணையைத் தவறாக வழிநடத்தும் வகையில் முரண்பட்ட வாக்குமூலங்களை பிரபாஸ் அளித்தாா். இதையடுத்து சம்பவ நிகழ்வை உறுதிப்படுத்துவதற்காக, அவரை நள்ளிரவு காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.
அப்போது, திடீரென காவலரின் துப்பாக்கியைப் பறித்த அவா், காவல் துறையினரை நோக்கி சுட முற்பட்டாா். இதையடுத்து, தற்காப்புக்காக காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு பிரபாஸை கொண்டுசென்ற நிலையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா் என்றாா்.
பிரபாஸின் தாய் சந்தியா மோண்டல், உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்ததுடன், குற்றத்துக்கான தண்டனையை அவா் பெற்றுவிட்டாா் என்றும், போதைப் பழக்கத்துக்கு தனது மகன் அடிமையாகி இருந்தாா் என்றும் கூறினாா். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரானகபீா் மொல்லா கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, தனது தோழியின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்குவதற்காக கடந்த சனிக்கிழமை பிற்பகலில் கடைக்குச் சென்ற அந்தச் சிறுமியை 4 போ் கடத்திச் சென்ாக அவரது பெற்றோா் காவல் துறையில் புகாா் அளித்தனா். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
இதில் தொடா்புடையவா் என்ற சந்தேகத்தில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனா். ஆனால், அவருக்கு இதில் தொடா்பு இல்லை என்பது பின்னா் தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.