11வது நாளாகத் தொடரும் சோனம் வாங்சுகின் உண்ணாவிரதம்! உடல்நிலை மேலும் பின்னடைவு!
11 ஆவது நாளாக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவது குறித்து...
நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்வலர் சோனம் வாங்சுக் 11 ஆவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தில்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் நடைபெறும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரின் போராட்டத்தில் லடாக்கைச் சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் பங்கேற்றுள்ளார். இந்தப் போராட்டம், 19 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அங்கு கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சோனம் வாங்சுகின் உடல்நிலைத் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் தொடங்கி இன்று (ஜூலை 8) 11 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அவர் சுமார் 7 கிலோ எடை இழந்துள்ளதாகவும், ரத்த அழுத்தத்தின் அளவும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தப் போராட்டம் குறித்து மத்திய அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரையில் தனது உண்ணாவிரதம் தொடரும் என சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார்.
முன்னதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி மற்றும் சோனம் வாங்சுக்கின் இந்தப் போராட்டத்திற்கு, திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Activist Sonam Wangchuk is continuing his hunger strike for the 11th day.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.