FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!

சப்தமாக பாடல் கேட்டால் அபராதம் என்று மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் - Center-Center-Kochi
பகிர்:

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, செல்போனில் ஸ்பீக்கரில் வைத்து பாடல்களைக் கேட்டாலோ, சப்தமாக செல்போனில் பேசிக்கொண்டு வந்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்மையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை வீடியோவில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, மக்கள் யாரும் தங்களது செல்போனில் விடியோக்களை பார்க்கும்போது ஸ்பீக்கர் போட்டு சப்தமாகக் கேட்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

ரயிலுக்குள்ளும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் பலரும் இவ்வாறு செய்தால், ஒலி மாசு ஏற்படுவதாக, ஏராளமான பயணிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதால் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தொடர்ந்து பயணிகளுக்கு இது குறித்து எங்கள் ஊழியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் புகார் குறையவில்லை. எனவே விழிப்புணர்வு மட்டும் போதாது, இனி ரயில்களுக்குள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படவிருக்கிறது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணிக்கும்போது, இரு பக்கமும் இரு பயணிகள் தங்களது செல்போனில் சப்தமாக ரீல்ஸ் பார்க்கிறார்கள். அப்போது நடுவே அமர்ந்திருப்பவரன் காதுகள் வலிக்கத் தொடங்குகின்றன. அவரது ரத்த அழுத்தம் அதிகரித்து கடும் வாக்குவாதம் கூட நேரிடுகிறது. சில வேளைகளில் அடிதடி வரை செல்லும் நிலை கூட ஏற்படுவதாக நாள்தோறும் சென் னமெட்ரோவில் பயணிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

summary

Important information for Metro passengers regarding listening to music at high volume!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments