முகப்பு
இந்தியா

ஜன சங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி!

பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினமான இன்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 23 ஜூன் 2026, 9:07 am IST
பிரதமர் மோடி
பகிர்:

பாரதிய ஜன சங்கத்தை தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினமான இன்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பாஜகவின் அரசியல் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக, தனது எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த, தலைசிறந்த தேசபக்தரும், அறிஞரும், ராஜதந்திரியுமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது அஞ்சலி. அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, பொதுவாழ்வில் கொண்ட துணிச்சல், தேச நலனில் கொண்ட அக்கறை பல தலைமுறைகளை ஊக்குவிக்கும். அவரது நினைவு நம்முடன் ஆழமாகப் பதிந்துள்ளது.

Advertisement

Advertisement

அவர் தனது வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை வழிகாட்டிய நெறிமுறைகளின் மூலம், உறுதியான மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவைக் கட்டமைப்போம் என உறுதிகொள்வோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி காஷ்மீரில் ஜூன் 22, 1953 அன்று மறைந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான ஜன சங்கத்தை அக்டோபர் 21, 1951 அன்று இவர் தோற்றுவித்தார். இது, பாஜவின் அரசியல் முன்னோடியாகக் கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் ஃபஸ்லுல் ஹக் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த இவர், ஓராண்டுக்குள் பதவியை ராஜிநாமா செய்தார்.

ஹிந்து மஹாசபாவில் சேர்ந்த இவர் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டில் அதிலிருந்து விலகினார். சுதந்திரத்திற்குப் பின்னர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இவரை இடைக்கால மத்திய அரசில் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக நியமித்தார்.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அரசியலமைப்பின் 370வது பிரிவின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். அப்பிரிவை பாஜக 2019-ல் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்று பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

summary

Death anniversary of Jana Sangh founder Syama Prasad Mukherjee: PM Modi pays tribute!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments