முகப்பு
இந்தியா

முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி!

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, கார்கே - X
பகிர்:

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

நவீன இந்தியாவின் சிற்பி எனப்படும் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள், நமது நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல நமக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் நேரு நினைவு நாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர்களில் முக்கியமானவரான நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராவார். பிரதமராக 16 ஆண்டுகள் 286 நாள்கள் பணியாற்றியுள்ளார். இந்தியாவில் அதிக காலம் பிரதமராக இருந்தது நேரு ஒருவரே.

summary

Former Prime Minister Nehru's Death Anniversary: ​​Rahul Gandhi and Kharge Pay Tributes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.