முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், சோனியா மரியாதை!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியதைப் பற்றி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மாநிலங்களவை எம்.பி. சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முதல் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரிய ராஜீவ் காந்தி, 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ராஜீவ் காந்தியின் நினைவு நாளான மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது மகள் மிராயா வத்ரா, மகன் ரைஹான் வத்ரா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தினர்.
Rahul, Sonia, and Kharge paid tribute at the memorial of former Prime Minister Rajiv Gandhi on the occasion of his death anniversary.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.