FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுல், சோனியாவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

தில்லியில் ராகுல், சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்தித்தது குறித்து...

Updated On : 10 ஜூன் 2026, 6:27 pm IST
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதல்வர் விஜய் - ஏஎன்ஐ
பகிர்:

நமது நிருபர்

புது தில்லி, ஜூன் 10: தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி அமைய முதலாவதாக வெளிப்படையாக ஆதரவை வழங்கியதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை நேரில் நன்றி தெரிவித்தார்.

மூன்று நாள்கள் பயணமாக தில்லிக்கு வந்த முதல்வர், புதன்கிழமை மாலையில் எண்.10 ஜன்பத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் இல்லத்துக்குச் சென்றார்.

Advertisement

Advertisement

அங்கு ஏற்கெனவே வந்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி முதல்வரை வாயிலில் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

சோனியா காந்தியுடனும் ராகுல் காந்தியுடனும் தனித்தனியாக படங்கள் எடுக்கப்பட்ட பிறகு இரு தலைவர்களுடனான முதல்வரின் சந்திப்பு சுமார் 20 நிமிஷங்கள் நீடித்தன.

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய முதல் கட்சியாக ஆதரவை வழங்கியதற்காக முதல்வர் ஜோசப் விஜய் இரு தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும், அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்தையும் ஆதரவையும் தெரிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

Chief Minister Vijay meets Rahul and Sonia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments