நீட் மட்டுமல்ல ஒரு தேர்வையும் விட்டு வைக்காத குஜராத் கும்பல்!
நீட் மட்டுமல்ல மோசடி செய்வதில் ஒரு தேர்வையும் விட்டு வைக்காத குஜராத் கும்பல் பற்றி..
நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு நாட்டையே உலுக்கிய நிலையில், குஜராத் மாநிலம் அனந்த் மாவட்டத்தில் வெளிநாடு செல்வதற்கான ஆங்கிலத் தேர்வுகளிலும் மோசடிகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு சென்று படிக்கவும், வேலை செய்யவும் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது ஐஇஎல்டிஎஸ் மற்றும் டிஓஇஎஃப்எல் போன்ற ஆங்கிலப் புலமையை அறியும் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இதுபோன்ற தேர்வுகளில் பங்கேற்பவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு பதிலாக தேர்வெழுதி மோசடி செய்து வந்துள்ளது இந்தக் கும்பல்.
Advertisement
Advertisement
இந்த தேர்வுகளை நடத்துவதற்கான மையமாக ஒருவர் அறையை வாடகை எடுத்து நடத்தி வந்துள்ளார். இங்கு தேர்வர்கள் தேர்வெழுத வரும்போது, அந்த அறைக்கு பக்கத்து அறையில் மோசடி செய்பவர்கள் தயாராக இருப்பார்கள். தேர்வு தொடங்கியதும், தேர்வை எழுதுபவரும், அவரது கணினியும் அங்கேயே இருக்கும். ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், அந்தக் கணினி பக்கத்து அறையில் இருப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு தேர்வு எழுதி முடிக்கப்படும்.
இது குறித்து புகார் வந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள கணினி, மொபைல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் எத்தனை பேருக்கு மோசடியாக தேர்வு எழுதிக் கொடுத்திருக்கிறார்கள், எவ்வளவு பணம் பெற்றுள்ளார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.