நீட் வினாத்தாள் கசிவு: மேலும் ஒரு பேராசிரியர் கைது!
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் ஒரு பேராசிரியர் கைது செய்யப்பட்டது குறித்து...
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் ஒரு பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிகழ்வு குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான, மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் உள்ள ஆர்.சி.சி. பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளரும் பேராசிரியருமான சிவராஜ் மோட்டேகான்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இவர், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு ஒன்பது கிளைகள் உள்ளன. இதன் முக்கிய கிளை லாத்தூரில் அமைந்துள்ளது. அவரது நிறுவனம் மற்றும் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், அசல் தேர்வில் கேட்கப்பட்ட அதே கேள்விகளைக் கொண்ட வேதியியல் வினா வங்கி மீட்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை தில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புணே, லாத்தூர் மற்றும் அஹ்லியநகர் ஆகிய இடங்களில் இருந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, 9 பேர் காவலில் எடுக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட பத்தாவது நபரான சிவராஜ் மோட்டேகான்கரையும் கைதுசெய்து, சிபிஐ காவலில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Another professor has been arrested in connection with the NEET question paper leak case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.