FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு! குற்றவாளிகள் உருவாக்கிய பிஃபா உலகக் கோப்பை 2026 வாட்ஸ்ஆப் குரூப்!

நீட் வினாத்தாள் கசிவு! குற்றவாளிகள் உருவாக்கிய பிஃபா உலகக் கோப்பை 2026 வாட்ஸ்ஆப் குரூப் பற்றி தகவல்..

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 5:49 pm IST
பிஃபா உலகக் கோப்பை 2026 - கோப்பிலிருந்து
பகிர்:

கடந்த ஆண்டு நவம்பம் மாதம் எட்டு மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிஃபா உலகக் கோப்பை 2026 (Fifa world cup 2026) என்ற வாட்ஸ்அப் குழுதான், நீட் வினாத்தாள் முறைகேடு மற்றும் குற்றவாளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகளான பி.வி. குல்கர்னி மற்றும் மனிஷா மந்தரே ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கண்டறிய உதவியதுடன், வினாத்தாள் கசிவு சதித்திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது என்பதையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக சிபிஐ தெரிவித்திருக்கிறது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ, இந்த மாதம் தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 20,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், இதுபற்றிய தகவலைத் தெரிவித்திருக்கிறது.

Advertisement

Advertisement

இரண்டு நீட் தேர்வர்கள் வாக்குமூலங்களின்படி, புனேயைச் சேர்ந்த மந்தாரே என்பவர் எட்டு பேர் கொண்ட வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கியிருக்கிறார்.

உயிரியல் பாடத்திற்கான சிறப்பு வகுப்புகளை ஒருங்கிணைக்கவும், பாட அட்டவணைகள், தேர்வுக்குப் பிந்தைய விடைத்தாள் மதிப்பீடு மற்றும் மதிப்பெண் கணக்கீடு ஆகியவை குறித்து விவாதிக்க இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த குழுவில், புணேவைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் மனிஷா வாக்மாரே மேலும் சில மாணவர்களை இணைக்க உதவியிருக்கிறார். மேலும், தேசிய தேர்வு முகமையில் இணைந்து செயல்படும் பாட நிபுணர்களான குல்கர்னி, மந்தரே ஆகியோர் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டதுடன், நீட் தேர்வில் கேட்கப்படும் வினாக்களும் இங்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளின்போது, மாணவர்களுக்கு நீட் தேர்வில் இடம்பெறும் கேள்விகளை சிறிது சிறிதாகக் கொடுத்து அதனை நோட்டுப் புத்தகங்களில் குறிக்கச் செய்திருக்கின்றனர் இரண்டு ஆசிரியர்களும்.

இவர்கள் கொடுத்த வினாக்கள் நீட் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மே மாதமே இவர்கள் இருவருமே கைதாகியிருக்கிறார்கள்.

இருவருமே, நீட் வினாத்தாள் தயாரிப்புப் பணியின் பல்வேறு கட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். மேலும், இயற்பியல் ஆசிரியர் மணீஷா ஹவால்தார், தன்னுடைய கைப்பட 66 கேள்விகளை எழுதி மாணவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு வழங்கியக் குற்றச்சாட்டில் கைதானார்.

நீட் வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டு முறு தேர்வு நடத்தப்பட்டு, மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய வழக்கில், மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, லட்டூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணி, புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யஷ் யாதவ், புணே பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், புணே சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா் உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகியிருக்கிறார்கள்.

summary

NEET Question Paper Leak! 'FIFA World Cup 2026' WhatsApp Group Created by the Culprits!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments