வினாத்தாள் கசிவு! தேர்வை ரத்து செய்தது மகாராஷ்டிர அரசு!
வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து தகுதித் தேர்வை மகாராஷ்டிர அரசு ரத்து செய்தது பற்றி...
மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் 'குரூப்-பி' நிலையிலான மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி, 'குரூப்-பி' நிலையிலான மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை மகாராஷ்டிர அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தியது.
இந்த தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே சமூக ஊடகங்களில் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மும்பை குற்றப்பிரிவின் துணை ஆணையர் நடத்திய விசாரணையின் முதல்கட்ட அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில், ரகசியத்தன்மை, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மையைப் பாதுகாக்கவும், தேர்வு நடைமுறை மீதான நம்பிக்கையைத் தக்கவைக்கவும் தேர்வை ரத்து செய்வதாக ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும், கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Question paper leak! Maharashtra government cancels state exam!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.