FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அனைத்து மாவட்டங்களிலும் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு!

இந்தியா முழுவதும் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அழைப்பு...

Updated On : 23 ஜூலை 2026, 4:53 pm IST
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜீத் தீப்கே... - PTI
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாளை (ஜூலை 24) நாடு தழுவிய போராட்டம் நடத்த இளைஞர்களுக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில், கடந்த ஜூன் 28 முதல் சோனம் வாங்சுக் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து 25 நாள்களுக்கும் மேலாகக் கடைபிடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஒரு நாள் போராட்டம் நடத்துவதற்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், இந்தியா முழுவதும் காவல் துறையினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இந்தப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்திய அமைதிப்பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தில்லி காவல் துறையினர் தடியடி நடத்தியதால் பெண்கள் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகத் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததுடன், தில்லியில் நடைபெறும் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Members of the Cockroach Janta Party have called upon the youth to stage a nationwide protest tomorrow (July 24) against the NEET question paper leak.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments