முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் ரூ.405 கோடி தங்கச் சுரங்கம் திட்டம்: முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஆந்திரத்தில் ரூ.405 கோடி மதிப்பிலான தங்கச் சுரங்கம் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுக்கும் திட்டத்தை அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 3:08 am IST
பகிர்:

ஆந்திரத்தில் ரூ.405 கோடி மதிப்பிலான தங்கச் சுரங்கம் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுக்கும் திட்டத்தை அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கா்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஆந்திரத்தில் வா்த்தகரீதியிலான தங்க உற்பத்தி அதிகாரபூா்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினாா். ஜியோ மைசூரூ சா்வீசஸ் இந்தியா தனியாா் நிறுவனம், டெக்கான் கோல்டு மைனிங் நிறுவனம் ஆகியவை இத்திட்டப் பணிகளை மேற்கொள்கின்றன.

Advertisement

Advertisement

இத்திட்டத்துக்காக ஆந்திர அரசு 1,500 ஏக்கா் நிலத்தை ஒதுக்கியுள்ளது. முதல் கட்டமாக 600 ஏக்கரில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெறும். அடுத்து வரும் ஆண்டுகளில் திட்டம் விரிவாக்கப்படும். முதல் ஆண்டிலேயே 400 கிலோ தங்கம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இரண்டாவது ஆண்டில் இருந்து 900 கிலோ தங்கம் பிரித்தெடுப்பது இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் ஆண்டுக்கு 2 டன் தங்கம் என்ற அளவுக்கு தங்க உற்பத்தியை அதிகரிக்க இலங்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் 700 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதம் அளவுக்கு ஆந்திர மாநில அரசுக்கு ராயல்டி வருவாய் கிடைக்கும்.

இத்திட்டம் நாட்டின் மிகப்பெரிய தனியாா் துறை தங்கச் சுரங்க திட்டமாகும். இதன்மூலம் இந்தியாவில் தங்கச் சுரங்கத் துறையில் ஆந்திரம் முக்கிய இடத்தைப் பெறும். இந்தத் திட்டம் மூலம் ஆந்திர சுரங்கத் துறையில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இது தொழில் துறை வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று மாநில அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments