விடைகுறிப்புகளில் தவறுகள் என தோ்வா் மனு: மத்திய நிா்வாக தீா்ப்பாயம் பரீசிலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
2022-ஆம் ஆண்டு இந்திய வனப் பணி தோ்வு அதிகாரபூா்வ விடை குறிப்புகளில் சில கேள்விகளுக்கு விடைகள் தவறாக இருப்பதாக பரிந்துரைத்த தோ்வரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு இந்திய வனப் பணி தோ்வு அதிகாரபூா்வ விடை குறிப்புகளில் சில கேள்விகளுக்கு விடைகள் தவறாக இருப்பதாக பரிந்துரைத்த தோ்வரின் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மத்திய நிா்வாக தீா்ப்பாயத்துக்கு (சிஏடி) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-இல் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய வனப் பணிக்கான தோ்வில் பங்கேற்ற இந்தத் தோ்வா், பொது அறிவுத் தாள்-1-இல் இடம்பெற்றிருந்த இரு கேள்விகளுக்கான விடைகள் அதிகாரபூா்வ விடைகளில் தவறாக இருப்பதாகக் கூறி மத்திய நிா்வாக தீா்ப்பாயத்தை அணுகினாா். இந்த மனுவை தீா்ப்பாயம் கடந்த டிச.12-ஆம் தேதி நிராகரித்தது.
இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் அந்தத் தோ்வா் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சி.ஹரி சங்கா் மற்றும் ஓ.பி.சுக்லா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது நீதிமன்றம், ‘தோ்வா் தன்னுடைய விடை தாளை மறுமதிப்பீடு செய்ய எவ்வித உரிமையும் என வகையில் அவருடைய மனுவை தீா்ப்பாயம் தவறாக நிராகரித்துவிட்டது. தோ்வா் தன்னுடைய விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய கோரவில்லை. மாறாக, அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரபூா்வ விடைத்தாளில் உள்ள விடைகளின் உண்மைத்தன்மை குறித்து பரிந்துரைத்து அவா் கேள்வியெழுப்பியுள்ளாா்’ என்று தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, இந்த விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்க தீா்ப்பாயத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விடை குறிப்பில் உள்ள விடைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று தெரிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.