என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?
என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்கும் என்ற தகவல் உண்மைதானா என்பது பற்றி..
ஏற்கனவே வானிலை மாற்றங்கள் அவ்வளவு ஒன்றும் மக்களுக்கு சாதகமாக இருக்கவில்லை, உலகம் முழுவதும் வாட்டி வதைக்கும் வெய்யில், அடித்துச் செல்லும் மழை என இருக்கிறது.
தற்போது, எல் நினோ உருவாகி அது குறிப்பாக தமிழகத்தின் பருவமழையை பாதிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. வழக்கமாக நல்ல மழை பெய்யும் என்றாலே பெய்யாமல் போகும் சாத்தியங்கள் இருக்கும் நிலையில் இயல்பான அளவை விடக் குறைந்துவிடும் என்று சொன்னால் மழை எப்படியிருக்கும் என மக்கள் இப்போதே கலக்கத்தில் உள்ளனர்.
ஒருவேளை, பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ, தமிழகத்தில் பருவமழையை பாதித்தால், நாம் குடிக்கும் தேநீர் விலை அதிகரிக்கலாம் என தரவுகள் சொல்கின்றன. எல் நினோ காரணமாக கால்நடைத் தீவனங்கள் விலை அதிகரித்து, பால் விலை ஏற்றம் பெறலாம், மளிகைப் பொருள்களின் விலைகளும் உயரலாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பால் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே, அடுத்த விலையேற்றத்துக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பால் விலைகள் ஏறியிருக்கும் நிலையில், மழை குறைந்து அதனால் கால்நடைத் தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டால், அது நேரடியாகவே பால் விலையில்தான் எதிரொலிக்கும் என்கிறார்கள்.
மழைப் பற்றாக்குறை என்பது எப்போதுமே ஒன்றுடன் நின்றுவிடாது, பருப்பு, தானியங்கள் என மளிகைப் பொருள்கள் மீதும் விலையேற்றம் என்ற சுமை விழும். எங்கே பல கிலோ மீட்டர் தொலைவில் உருவான எல் நினோ எப்படி சப்தமே இல்லாமல், நாம் காலையில் குடிக்கும் தேநீர் முதல் மாத மளிகை சாமான் செலவு வரை அதிகரிக்கும் என்பதை நினைத்துத்தான் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
So, will tea prices rise due to El Niño? Is that true?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.