சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் சிறைத் தண்டனை! எஸ்மா சட்டம் அமல்!
எஸ்மா சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு.
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு உணவகத் தொழிலிலும், உணவு விநியோகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னரிமை அளித்தும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய நேரத்தில் அமல்படுத்தப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பதுக்கல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம் என்ற சட்டத்தை (ESMA - Essential Services Maintenance Act, 1968) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்திருப்பது, ஹோட்டல்கள், உணவக உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
The central government has implemented the ESMA Act to reduce the shortage of cooking gas cylinders.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.