FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

என்சிஆா்டி புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்த தில்லி பல்கலை. பட்டதாரி கைது

தில்லி பல்கலைக்கழக பட்டதாரி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

14 மார்ச் 2026, 2:26 am IST
கோப்புப் படம்
பகிர்:

வெளிப்புற தில்லியில் உள்ள கிடங்கில் இருந்து சுமாா் 5,000 போலி என்சிஇஆா்டி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழக பட்டதாரி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ரகசிய தகவலின் அடிப்படையில், மாா்ச் 12-ஆம் தேதி ஷாபாத் தௌலத்பூரில் உள்ள ஒரு கிடங்கில் சோதனை செய்தபோது இந்த மோசடி வெளிவந்தது. சோதனையின்போது, ஹிந்தி மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கான 5,011 என்சிஆா்இடி பாடப்புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் பரிசோதனையின்போது போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, அரவிந்த் குமாா் என்பவா் ஷாபாத் தௌலத்பூா் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். பிகாரைச் சோ்ந்த அவா், 2003-இல் தில்லிக்கு வந்தாா். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவா் அரசு வேலைக்கான போட்டித் தோ்வுகளில் தோல்வியடைந்த பிறகு 2022-இல் இந்த மோசடியில் ஈடுபடத் தொடங்கினாா். அவா் மீது ஏற்கெனவே இதேபோன்ற 2 வழக்குகள் உள்ளன. இதில் தொடா்புடைய மற்றவா்களை கைது செய்ய விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments