தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!
அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட தலைமை மறுத்ததால், பாஜக நிர்வாகி ஒருவர் கதறிழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை மறுத்ததால், பாஜக நிர்வாகி ஒருவர் கதறிழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அறிவிக்கப்பட்டன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 126 அஸ்ஸாம் மாநிலத்தில், ஆளும் கட்சியான பாஜக இன்று காலை முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 88 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பூபென் குமார் போரா, பிரத்யுத் போர்டோலாய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரத்யுத் போர்டோலாய் வரும் தேர்தலில் பாஜக சார்பில் திஸ்பூர் தொகுதியிலும் பூபென் குமார் போரா, தான் ஏற்கெனவே போட்டியிட்ட பிஹ்புரியா தொகுதியிலும் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில், அபயாபுரி தொகுதியில் போட்டியிட அஸ்ஸாம் கானா பரிஷத் கட்சியிலிருந்து விலகி, சமீபத்தில் பாஜகவில் இணைந்த பூபென் ராய்க்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த பாஜக நிர்வாகி சஞ்சய் ராய் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று மாலை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக வெளியான தகவலை அறிந்து பாஜக நிர்வாகி சஞ்சய் ராய் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
அவர் அழுவதைப் பார்த்த அவரது ஆதரவாளர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். இருப்பினும், அவருக்கு வாய்ப்பு வழங்க தலைமை மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சய் ராய் அழுத விடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. பாஜக நிர்வாகி சஞ்சய் ராய்க்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
An emotional scene played out in Assam’s Abhayapuri constituency as a BJP aspirant broke down follow…
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.