பங்குச் சந்தை வீழ்ச்சி: ஒரு மணிநேரத்தில் ரூ. 7.64 லட்சம் கோடி இழப்பு!
இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7.6 டிரில்லியன் ரூபாய் இழப்பு
இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7.6 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மார்ச் 19) காலை 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியது.
இன்றைய பங்குச் சந்தையின் முதல் ஒரு மணிநேரத்திலேயே சுமார் 7.64 டிரில்லியன் ரூபாய் என்ற அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. முந்தைய நாள் (மார்ச் 18) வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனமானது, ரூ. 438.63 டிரில்லியன் என்று இருந்த நிலையில், இன்று ரூ. 430.99 டிரில்லியனாகக் குறைந்தது. அதாவது, 7.64 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணம் என்ன?
இந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள், மேற்காசிய நாடுகள் போர்ப் பதற்றம் காரணமாக இன்று சரிவை சந்தித்துள்ளன.
கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் நேற்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி உற்பத்தி ஆலையில் தீப்பற்றி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகள் எரிபொருள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதன்காரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 110 டாலரைக் கடந்துள்ளது.
இந்த நிலையில்தான், சர்வதேச அளவில் இன்று பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
Stock Market Crash: Investors Lose Rs 7.6 trillion In An Hour
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.