மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!
மேற்கு வங்கத்தில் மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்கவுள்ளது பற்றி...
மேற்கு வங்கத்தில் வருகிற மே 9 ஆம் தேதி பாஜக அரசு பதவியேற்பு விழா நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி முதல்முறையாக அங்கு பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 207, திரிணமூல் காங்கிரஸ் 80, காங்கிரஸ் 2, இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து மேற்கு வங்கத்தில் புதிய பாஜக அரசு வருகிற மே 9 ஆம் தேதி பதவியேற்கும் என்று பாஜக மாநில தலைவர் சாமிக் பட்டாச்சார்யா தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தற்போதைய மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் கடைசி நாள் பிரசாரத்தின்போது, 'அடுத்து மேற்கு வங்க பாஜக அரசு பதவியேற்பு விழாவுக்கு வருவேன்' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும் மே 9 ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
BJP Government In Bengal To Take Oath On May 9
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.