மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், மறைந்த அஜீத் பவாரின் மனைவியும் மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவருமான சுநேத்ரா பவார் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி இடைத்தேர்தலில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்த சுநேத்ரா பவார், கடந்த ஜனவரி 31ஆம் தேதி மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், பாராமதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று தற்போது மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கிறார்.
Advertisement
Advertisement
அதற்கு முன்னதாக அவர் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார், ஜன. 28 அன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றார்.
பின்னர் சுநேத்ரா, தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அஜீத் பவார் மறைவால் பாராமதி தொகுதிக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தரப்பில் (அஜீத் பவார் தரப்பு) சுநேத்ரா பவார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
Sunetra Pawar resigns from Rajya Sabha membership!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.