பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி
மேற்கு வங்கத்தில் மக்களிடையே அங்கீகாரம் கிடைத்துள்ளது பற்றி நிதின் கட்கரி கூறுவது..
மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கு, அக்கட்சியின் சித்தாந்தத்திற்கு மக்களிடையே அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தல்களில் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜக 207 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுக்கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், கிழக்கு இந்தியாவில் மிக முக்கியமான அரசியல் திருப்புமுனையையும் பதிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் சுவேந்து அதிகாரி இன்று காலை முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். பாஜகவுக்கு எதிராக நிலவி வந்த எதிர்ப்பிற்குப் பிறகு மாநிலத்தின் அரசியலை மாற்றியமைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக இது அமைந்தது.
2011-ஆம் ஆண்டில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணி, தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்தது.
மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாகப் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றி, பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜிக்குச் செலுத்தப்படும் அஞ்சலியாகும்.
மிகவும் இக்கட்டான சூழல்களுக்கு மத்தியிலும் முகர்ஜி பாரதிய ஜனசங்கத்தை நிறுவினார். இன்று, மேற்கு வங்கத்தில் நமது சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது நமது தொண்டர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
வங்க மக்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றம், எதிர்காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அவர் கூறினார். இவ்வாறு அவர் பேசினார்.
Union minister Nitin Gadkari on Saturday said the BJP's "spectacular" victory in West Bengal shows that the party's ideology has now gained recognition among people there, and the power change brought by them will pave the way for development of the eastern state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.