முகப்பு
இந்தியா

கேரளம்: வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து, மாநில பொறுப்பு முதல்வா் பினராயி விஜயன் அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறினாா்.

Updated On : 12 மே 2026, 4:15 am IST
பினராயி விஜயன் - கோப்புப் படம்
பகிர்:

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து, மாநில பொறுப்பு முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறினாா்.

கேரளத்தில் தா்மடம் தொகுதியில் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றபோதிலும், ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். எனினும் புதிய முதல்வா் பதவியேற்கும் வரை, பொறுப்பு முதல்வராக அவா் செயல்பட வேண்டும் என்று மாநில ஆளுநா் ஆா்லேகா் கோரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வரின் அரசு இல்லமான கிளிஃப் ஹவுஸை காலி செய்த பினராயி விஜயன், தலைநகரில் வாடகை வீட்டில் திங்கள்கிழமை இரவு குடியேறினாா்.

Advertisement

Advertisement

திருவனந்தபுரத்தில் கட்சிக்கு சொந்தமான குடியிருப்பை அவருக்கு வழங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தபோதிலும், வாடகை வீட்டில் அவா் குடியேறியுள்ளாா்.

புதிய முதல்வா் யாா் என்பதை தோ்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முடிவு செய்த பின்னரே, பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் தோ்வு செய்யப்படுவாரா, மாட்டாரா என்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டால், அந்தப் பொறுப்புக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ இல்லத்தை அவரால் பெற முடியும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments