அஸ்ஸாமின் பாதுகாப்பு வளர்ச்சியை உறுதி செய்வோம்: முதல்வர் ஹிமந்த!
அஸ்ஸாமில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி உறுதி செய்வது பற்றி..
அஸ்ஸாமில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்ற ஹிமந்த பிஸ்வ சர்மா, ஆட்சியமைத்த முதல் நாளில் அமைச்சரர்களுடன் இணைந்து, அஸ்ஸாமின் முதல் முதல்வரான கோபிநாத் பர்தோலோயின் நினைவிடத்திற்குச் சென்ற மலரஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த சர்மா கூறியதாவது,
Advertisement
Advertisement
அரசின் பணிகளை முறையாகத் தொடங்குவதற்கு முன்பாகவே, பாரத ரத்னா கோபிநாத் பர்தோலோயின் நினைவிடத்திற்குச் சென்று அவரது ஆசியைப் பெற்றது. இதன் மூலம் அஸ்ஸாமின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற முடியும்.
சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அஸ்ஸாம் மக்களின் பாதுகாப்பிற்காகப் பர்தோலோய் அயராது உழைத்ததாக அவர் குறிப்பிட்டார். அஸ்ஸாம் மாநிலத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்களின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் பிற்பகலில் நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் அரசு தனது செயல்பாடுகளை முறையாகத் தொடங்கும் என்றும் சர்மா தெரிவித்தார்.
அஸ்ஸாமின் 16-வது சட்டப்பேரவையின் முதல் அமர்வு மே 21 முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும். அந்த அமர்வின்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்எல்ஏ.க்கள்) பதவியேற்பார்கள்.
அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசிய முதல்வர், சட்டப்பேரவை அமர்வு நிறைவடைந்த பிறகு அந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இது புதிய அரசு அல்ல, மாறாக முந்தைய அரசின் தொடர்ச்சியே. நாங்கள் தொடர்ந்து முழு மனதுடன் பணியாற்றுவோம்.
பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலேயே அரசின் முழு கவனமும் இருக்கும் என முதல்வர் திட்டவட்டமாகக் கூறினார்.
Assam Chief Minister Himanta Biswa Sarma on Wednesday said his government was committed to ensuring the security and development of the state while fulfilling the promises made in the BJP's election manifesto in "letter and spirit".
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.