அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு!
அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
குவாஹாட்டியின் கானாபாரா பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிம்ந்த பிஸ்வ சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள், பாஜக தலைவர் நிதின் நவீன் ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், குவாஹாட்டியில் வெற்றி பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியின் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வ பொறுப்பேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.
இதையடுத்து, பதவியேற்பு விழாவில் அவரது குடும்பமான முதல்வரின் தாயார் மிருணாலினி தேவி, மனைவி ரினிகி புயான் சர்மா, மகன் நந்தில் பிஸ்வா சர்மா, மகள் சுகன்யா சர்மா ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.
Himanta Biswa Sarma was sworn in as the chief minister of Assam for the second consecutive term on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.