அஸ்ஸாம் நாகோன் மக்களவைத் தொகுதி: பாஜக முன்னிலை! காங்கிரஸ் 3-ம் இடம்!
அஸ்ஸாம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி...
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா முன்னிலை வகித்து வருகிறார்.
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு கடந்த அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று (அக். 9) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
காலை 10.30 மணி நிலவரப்படி, பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா முன்னிலை வகித்து வருகிறார். இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முஹம்மது பத்ருதீன் அஜ்மலைவிட பாஜக வேட்பாளர் 44,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் சிவமோனி போரா 3 ஆம் இடத்தில் உள்ளார்.
இத்துடன் தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Assam Nagaon Lok Sabha constituency: BJP leading: Congress in third place
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.