அஸ்ஸாம் மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றுகிறது பாஜக! 82,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!
அஸ்ஸாம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பற்றி...
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா 82,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு கடந்த அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (அக். 9) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Advertisement
Advertisement
பிற்பகல் 12.40 மணி நிலவரப்படி அவர், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முஹம்மது பத்ருதீன் அஜ்மலைவிட82,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிவமோனி போரா 3 ஆம் இடத்தில் உள்ளார்.
அதிக வாக்குகள் வித்தியாசம் காரணமாக, பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா வெற்றி உறுதியாகியுள்ளது.
அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த பிரத்யுத் போா்டோலோய், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து, அங்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆளும் பாஜக சாா்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவாசிஷ் சா்மா போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Assam Lok Sabha Bypoll Results: BJP Devashish Sharma Leads In Nagaon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.