பாஜக மாநிலங்களவை எம்.பி. ராம்ராவ் வத்குடே மாரடைப்பால் காலமானார்!
பாஜக மாநிலங்களவை எம்பி ராம்ராவ் சாகராம் வத்குடே மாரடைப்பால் காலமானது பற்றி...

பாஜக மாநிலங்களவை எம்பி ராம்ராவ் சாகராம் வத்குடே மாரடைப்பால் காலமானார்.
பாஜக மாநிலங்களவை எம்பியாக இந்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்ராவ் சாகராம் வத்குடே தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 11. 45 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருமல் காரணமாக நவ. 20 அன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி இரவு அவர் காலமானதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
மகாராஷ்டிரத்தின் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள பர்பானி பகுதியைச் சேர்ந்த வத்குடே, இந்தாண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக ஜூன் 2014 முதல் அக்டோபர் 2019 வரை மாநில சட்ட மேலவை உறுப்பினராக இவர் பணியாற்றியுள்ளார்.
அவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வத்குடேவின் உடல் திங்களன்று பர்பானியில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.