FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு!

உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டிருப்பது பற்றி...

9 அக்டோபர் 2026, 7:49 pm IST
பகிர்:

உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதில் பாஜக சார்பில் 8 பேரும், சமாஜவாதி கட்சி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவையின் சிறப்புச் செயலாளருமான அஜித் வர்மா கூறியதாவது: மாநிலங்களவைத் தேர்தலுக்காக களத்தில் இருந்த 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

மேலும், சமாஜவாதி கட்சி வேட்பாளர் தன்ராஜ் பரிமல் நத்வானியைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது வெற்றிச் சான்றிதர்களைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

சமாஜவாதி கட்சித் தலைவர் ராம் கோபால் யாதவ் மற்றும் பாஜக வேட்பாளர் ராதாகாந்த் ஓஜா ஆகியோரின் சான்றிதழ்களை அவர்களது பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. அவா்களில் 8 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். ஒருவா் சமாஜவாதி கட்சியையும், மற்றொருவா் பகுஜன் சமாஜ் கட்சியையும் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

All 10 Rajya Sabha candidates from Uttar Pradesh eight from the Bharatiya Janata Party and two from the Samajwadi Party were declared elected unopposed on Friday, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments