அனைவருக்கும் பாதுகாப்பான சுகாதாரமான உணவு வழங்குவதில் உறுதி: ரேகா குப்தா
அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை தில்லி புதுப்பிக்கிறது என முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை தில்லி புதுப்பிக்கிறது என முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: விவசாய நிலம் முதல் உணவு மேசை வரை, ஒவ்வொரு நிலையுமே முக்கியமானது. விழிப்புணா்வை அதிகரிப்பதன் மூலமும், பொறுப்பான உணவு நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், நாம் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கவும், ஆரோக்கியமான தில்லியை உருவாக்கவும் முடியும்.
உலக உணவுப் பாதுகாப்பு நாளில், அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் சத்தான உணவை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை தில்லி புதுப்பிக்கிறது என ரேகா குப்தா எக்ஸ் பதிவில் கூறினாா்.
Advertisement
Advertisement
உணவு மூலம் பரவும் ஆபத்துகள் குறித்த உலகளாவிய கவனத்தை ஈா்ப்பதற்கும், அவற்றை முறியடிக்கவும், கண்டறியவும் மற்றும் நிா்வகிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும், ஆண்டுதோறும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 2026ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், ‘சுமையிலிருந்து தீா்வுகளை நோக்கி -எங்கும் பாதுகாப்பான உணவு‘ என்பதாகும்.
உலக சுகாதார அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றால் இந்த தினம் கூட்டாக வழிநடத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் சுமாா் 600 மில்லியன் மக்கள் உணவு மூலம் பரவும் நோய்களால் சுமாா் 200 வகைகள் பாதிக்கப்படுகின்றனா் என்றும் உணவு மூலம் பரவும் நோய்களால் ஆண்டுதோறும் 4,20,000 போ் உயிரிழக்கின்றனா் (இத்தகைய உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும்) எனவும் தரவுகள் கூறுகின்றன.
குறிக்கோள் சாா்ந்த மற்றும் செலவு குறைந்த தீா்வுகளை வகுப்பதற்கு, சுகாதாரத் தரவுகளைப் பயன்படுத்துவதை 2026ஆம் ஆண்டிற்கான பிரச்சாரம் வலியுறுத்துகிறது. ‘உணவுப் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு‘ என்பதே இந்நாளின் முழக்கமாகும்.