தில்லியில் சிஎன்ஜி விலை மீண்டும் உயர்வு: ஒரே வாரத்தில் இரண்டாவது முறை
தலைநகர் தில்லியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, ஞாயிற்றுக்கிழமை சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டது.
தலைநகர் தில்லியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக, ஞாயிற்றுக்கிழமை சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டது.
நாட்டின் மிகப்பெரிய நகர எரிவாயு நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் தகவலின்படி, தேசிய தலைநகரில் இப்போது சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ. 80.09 ஆக உள்ளது. கடந்த வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே இந்த விலை உயர்வு வந்துள்ளது.
இருப்பினும், சமையலறைகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் பதற்றம் எதிரொலியாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.
Advertisement
Advertisement
இதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-க்கும் மேல் உயா்ந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினா் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா்.
இந்த விலை உயா்வு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். கடந்த சில ஆண்டுகளில் எரிபொருள் விலைகள் தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், இந்த திடீா் உயா்வு அனைத்து துறைகளிலும் தொடா் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
CNG prices were hiked by Re 1 per kg on Sunday, the second increase in rates in less than a week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.