அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு உயர்வு!
மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து...
மேற்கு வங்கத்தில் அரசுப் பணியாளர்களுக்கான உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, குரூப் ஏ, பி, சி மற்றும் டி மாநில அரசுப் பணிகளுக்கான உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்படுவது மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
திருத்தப்பட்ட இந்த விதிமுறைகளின்படி, குரூப் ஏ பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 41 ஆண்டுகளாகவும், குரூப் பி பதவிகளுக்கு 44 ஆண்டுகளாகவும், குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு 45 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பு ஏற்கெனவே அதிகமாக இருக்கும் பட்சத்தில், தற்போதுள்ள வயது வரம்பே தொடரும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லாத பிற வழிகள் மூலமான நியமனங்கள், அதாவது சட்டப்பூர்வ அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமான ஆட்சேர்ப்புகள் உள்பட, அனைத்து நியமனங்களுக்குமான உச்ச வயது வரம்பு 45 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதியின் அடிப்படையில், அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The West Bengal government has issued an order raising the upper age limit for government employees by five years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.